ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு… 10 பேர் பலி!

Jammu And Kashmir Attack
Jammu And Kashmir Attack

ஜம்மு காஷ்மீரில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் அடிக்கடி தீவிரவாத தாக்குதல் நடைபெறுவது வழக்கம்தான். ஆனால், சில சம்பவங்களில் மட்டுமே அதிகப்படியான பலி எண்ணிக்கை நடக்கும். ஏனெனில், தாக்குதல் தீவிரமாவதற்குள் ராணுவம் குவிந்துவிடும்.

அந்தவகையில் நேற்று ஜம்மு காஷ்மீரில் உள்ள ரியாசியில் ஷிவ்கோடா கோவிலுக்குச் சென்று திரும்பிய பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சம்பவம் அறிந்த உடனே போலீஸார் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள் 10 பேர் பலியாகினர். இதனையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த தாக்குதலை நடத்தியது ரஜோரி, பூஞ்ச் மற்றும் ரியாசியின் மேற்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதக் குழு என தெரியவந்துள்ளது.

தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டபோது பேருந்து, ட்ரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது. இந்தச் சம்பவத்தில் மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பள்ளத்தில் விழுந்தவர்களை ட்ரோன்கள் மூலம் தூக்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஏறதாழ 10 பேர் காயமடைந்துள்ளனர் என்று கணிக்கப்படுகிறது. ஆனால், சரியாக எத்தனைப் பேர் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

அதேபோல், காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்கள் யாரென்றும் அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் உள்ளூர் வாசிகள் இல்லை என்பதை மட்டும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஷிவ்கோடா கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
வெளிநாட்டுத் தலைவர்கள் வருகையுடன் களைகட்டியது பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழா!
Jammu And Kashmir Attack

டிரோன்கள் மூலம் அப்பகுதிகளில் ராணுவம் தீவிர சோதனையில் இறங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் உட்பட சில அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ரியாசி மாவட்டத்தில் இதற்குமுன் தீவிரவாத தாக்குதல் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com