எடிட்டரின் முன்ஜாமீன் மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் கடும் எதிர்ப்பு..!

jananayagan
jananayagansource:Dailythanthi
Updated on

நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்த விவகாரத்தில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களின் வாக்குமூலத்தால் எடிட்டர் உமாசங்கர் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

தனக்கு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும், படக்கசிவுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் கூறி முன் ஜாமீன் கோரியுள்ளார் உமாசங்கர். திரைத்துறையில் யாருடனும் தொடர்பில்லாத தன்னை சிக்க வைத்துள்ளதாகக் கூறி உமாசங்கர் முன் ஜாமீன் கோரியுள்ளார். ஃப்ரீலான்சிங் எடிட்டர் உமாசங்கர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. ஆனால் வழக்கின் முக்கிய குற்றவாளிக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று KVN  தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. அத்துடன் ஜனநாயகன் திரைப்படம் லீக்கான பிறகு, கைதாவதிலிருந்து தப்பிக்கவே உமாசங்கர் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

காவல்துறை தரப்பும் ஜனநாயகன் படத்தை எடிட்டர் உமா சங்கர் லீக் செய்ததற்கான போதிய ஆதாரங்கள் உள்ளது என்று கூறியுள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சி.குமரப்பன் இடையீட்டு மனு தாக்கல் செய்ய தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கினார்.

logo
Kalki Online
kalkionline.com