விரைவில் தொடங்க உள்ள ஜந்தர் மந்தர் சீசன் 2: அபிஜித் திப்கே அறிவிப்பு!

டெல்லியில் மீண்டும் தொடங்கும் போராட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு!
Abhijit Deepke
Abhijit DeepkeDeccan Chronicle
Updated on

காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே இன்று மாலை வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிவிப்பின்படி,மீண்டும் டெல்லியில் இன்னொரு போராட்டத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'ஜந்தர் மந்தர் சீசன் 2' விரைவில் தொடக்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இது இந்திய அளவில் அரசியல் வட்டாரத்தை பரபரப்பாகியுள்ளது.

டெல்லியில் இன்று தனது ஆதரவாளர்களுடன் பேசிய அபிஜித் திப்கே, நிகழ்கால அரசியல் சூழல் மற்றும் தங்களது கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும்விரிவாக பேசினார். அவர் சமூக வலைதளங்களில் பல இளைஞர்களும் பொதுமக்களும் "எப்போது ஜந்தர் மந்தர் சீசன் 2 தொடங்கும்? " என்று தன்னிடம் கேட்பதாக தெரிவித்தார். அவர்களுக்கு தான் கூற வேண்டிய பதில் என்னவென்றால், மக்களின் உரிமைக்காக இந்த போராட்டத்தின் இரண்டாவது கட்டம் விரைவில் தொடங்குவதற்காக தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகிறோம், என்று கூறியுள்ளார்.

ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்தை பற்றி அபிஜித் குறுகையில் "மாணவர்கள் அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி அரசியலுக்காக போராடவில்லை, தங்களின் உரிமைக்காக போராடி வருகின்றனர். அவர்களின் இந்த போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முழு ஆதரவையும் அளிக்கிறது. எங்களுக்கு கட்சி தொண்டர்கள் மற்றும் பணியாளர்கள் போராட்டக்காரர்களுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவு உள்ளிட்ட வசதிகளை தங்கள் ஏற்படுத்தி தருவதாக கூறினார்.

பஞ்சாப் மற்றும் ஜார்கண்டில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு போராட்டங்களின் ஆரம்ப காலகட்டங்களில் அமைதி காத்த கரப்பான் பூச்சி கட்சியினர், சில தினங்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய பின்னர், தங்களது மௌனத்தை கலைத்திருந்தனர். டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, டெல்லியில் அவர்கள் தங்குவதற்கும், போராடுவதற்கும் போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள் , தங்களுக்கு எந்த ஒரு வசதியும் கிடைக்கவில்லை. வாடகைக்கு இடங்கள் கேட்கப்பட்டும் யாரும் தருவதற்கு விரும்பவில்லை என்று கூறினார்கள்.

CJP
Neet protest X

டெல்லி அரசின் கெடுபிடிகள் கடுமையாக இருப்பதாலும் , திறந்தவெளிகளிலும் பாலங்களின் அடியிலும் , மாணவர்கள் தங்கி தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராடினர். பல சந்தர்ப்பங்களில் கூட்டங்களை கட்டுப்படுத்தவும் ஆதரவாளர்களை ஒன்றிணைக்கவும் இடம் கிடைக்காமல் திண்டாடியதாக அபிஜித் குறிப்பிட்டுள்ளார்.

சிஜேபி கட்சியின் இரண்டாவது கட்ட நடவடிக்கையான 'ஜந்தர் மந்தர் சீசன் 2' விரைவில் தொடங்க உள்ள நிலையில், போராட்டக்காரர்களுக்கு அரசாங்கம் அனுமதி அளித்து தங்கும் இடங்களை வழங்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுபோன்று தடைகள் ஏதேனும் வந்தால், அதை எவ்வாறு சமாளித்து போராட்டத்தை வெளிப்படுத்துவது என்றும் சிஜேபி வியூகம் வகுத்து வகுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அபிஜித்தை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சிஜேபி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா, நாடு விடுதலை அடைந்த பின்னரும் அரசு பள்ளிகள் மிகவும் பின்தங்கி இருப்பதாகவும், குழந்தைகள் கல்வி கற்கும் வேலையில் தொழிலாளர்களாக மாறவேண்டிய சூழலில் இருப்பதாக, அரசாங்கத்தை குற்றம் சாட்டினார். கல்வித்துறையை மீட்டெடுக்க சுதந்திர தினம்(ஆகஸ்ட்15) அன்று நாடு முழுவதும் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்தார். அதன் பின்னர் ஒவ்வொரு பள்ளிகளின் தங்களது போராட்டம் நடைபெறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com