விசித்திரமானதையும் கற்பனைக்கும் எட்டாத தொழில்நுட்பங்களையும் மனிதன் தனது அறிவால் உருவாக்கி வருகிறான். இந்த நிலையில் ஜப்பானை சேர்ந்த நபர் ஒருவர் தனது உருவத்தை நாயின் உருவத்தை போல தத்ரூபமாக மாற்றி உள்ளார். இதற்காக 12 லட்சம் ரூபாய் செலவு செய்து நாயை போல் மாறியிருக்கிறார் அவர்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டோகோ என்ற நபர் சிறு வயது முதலே நாய்கள் மீது பிரியம் கொண்டு இருந்தார். மேலும் தனது வீட்டில் நாய்களை வளர்ப்பதில் தீவிரம் ஆர்வம் காட்டி வருகிறார். விலங்குகளை பராமரிப்பது, அவைகளுடன் அதிக நேரங்களை செலவிட்டு வந்த நிலையில் நாயைப் போல மாற ஆர்வம் காட்டியிருக்கிறார். இதற்காக ஜப்பானைச் சேர்ந்த தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான ஆடைகளை வடிவமைக்கும் நிறுவனமான ஜெட்பெட் என்ற நிறுவனத்தின் மூலம் தனது கனவை நிறைவேற்றி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜெட்பெட் நிறுவனம் டோகோவை தத்ரூபமான நாயை போல் காட்சிப்படுத்தி உள்ளது. அதற்காக 12 லட்சம் ரூபாய் செலவு செய்து கூலி வகை (collie dog) நாயை போன்ற ஆடையை உருவாக்கி இருப்பதாகவும், இதற்கு 40 நாட்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் மூலம் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மனிதனின் போலி தன்மையை வெறுக்கும் காரணத்தால் மிருகமாக மாறி வாழ ஆசைப்படுவதாகவும், அந்த ஆசை நிறைவேறி இருப்பதாகவும் அது தொடர்பான வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்து குறிப்பிட்டு இருக்கிறார் டோகோ. மேலும் இந்த வீடியோ ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது என்றாலும் தற்போதுதான் சமூக வலைதளத்தில் அது பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதை பார்க்கும் பலரும் உண்மையான கூலி வகை நாய் இனத்தைப் போன்றே இருப்பதாக கூறி ஆச்சரியத்தில் கமெண்ட்களை பதிவு செய்கின்றன.
_____
#நாய் #நாய் உருவம் #ஆடை வடிவமைப்பு நிறுவனம் #ஜப்பான் #டோகோ
#dog #dog figure #Japan