5 டிரில்லியன் டாலர் முதலீடு செய்ய ஜப்பான் தயாராக இருக்கிறது – ஜப்பானின் எதிர்பார்ப்புகளை இந்தியா நிறைவேற்றுமா?

5 டிரில்லியன் டாலர் முதலீடு செய்ய ஜப்பான் தயாராக இருக்கிறது – ஜப்பானின் எதிர்பார்ப்புகளை இந்தியா நிறைவேற்றுமா?

ஜப்பானின் பொது நிறுவனங்கள் மட்டுமல்ல தனியார் நிறுவனங்களும் இந்தியாவுடனான உறவை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஜப்பானின் முன்னாள் பிரதமரான யோஷிதே சுகா தெரிவித்திருக்கிறார். இந்தியாவுக்கும் ஜப்பானிக்கும் இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

ஜப்பான் நாட்டின் தனியார் நிறுவனங்களை தொடர்ந்து இந்தியாவில் முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவுடனான வர்த்தகத்தின் மூலம் இரண்டு நாடுகளும் வளர்ச்சி பெறமுடியும் என்று குறிப்பிட்டவர், ஜப்பானியர்கள் இந்தியாவில் தொழில் தொடங்குமளவுக்கு இந்தியாவின் வர்த்தக சூழலையும் மேம்படுத்துமாறு இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கிறேன் என்றார். 

கடந்த பத்தாண்டுகளாகவே ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்த உறவு மேம்பட்டு வருகிறது. ஆனால், ஜப்பானுக்கு இந்தியா செய்யும் ஏற்றுமதி தொடர்ந்து  குறைந்து வருகிறது.  2011ல் 6 பில்லியனாக இருந்த ஏற்றுமதி, 2022ல் 5 பில்லியனாக மட்டுமே இரூந்திருக்கிறது. அதே நேரத்தில் ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2011ல் 12 பில்லியனாக இருந்த இறக்குமதி, 2022ல் 16 பில்லியனாக உயர்ந்திருக்கிறது. 

5 டிரில்லியன் டாலர் அளவுக்கு ஜப்பான், இந்தியாவில் முதலீடு செய்ய தயாராக இருக்கிறது. இந்தியாவின் வணிக சூழலும், கொள்கை முடிவுகளும் ஜப்பானை தொடர்ந்து தயக்கத்தில் வைத்துள்ளன. ஜப்பானைப் போலவே இந்தியாவுக்கும் ஜப்பானில் தொழில் தொடங்குவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.

தரம் குறித்த விஷயங்களில் ஜப்பான் எந்தவித சமரசத்திற்கும் தயாராக இல்லாத காரணத்தால் இந்திய வணிகர்களுக்கு ஜப்பான் உடனான வர்த்தக ஒப்பந்தங்களால் பெரிய அளவு லாபம் இருந்ததில்லை. ஜப்பான் தரப்பில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்திவிடப்படவேண்டும் என்பது இந்தியாவின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. 

ஜி 7 நாடுகளில் ஜப்பானிடம் மட்டுமே இந்தியாவால் தடையில்லாத வர்த்தகத்தை செய்ய முடியும். இருநாடுகளிடையே ஏற்கனவே சிஇபிஏ ஒப்பந்தம் 2011 முதல் அமலில் இருந்து வருகிறது. இந்தியாவை விட ஜப்பான் கூடுதல் ஆர்வம் காட்டுமளவுக்கு பொருளாதார சூழல் மாறியிருக்கிறது. 

இந்தியா முதலீடு செய்ய ஏற்ற இடம் என்கிற கருத்து ஜப்பானியர்கள் மத்தியில் சமீபகாலமாக அதிகரித்து வரகிறது. கோவிட் தொற்று பரவல் காலத்திற்கு பின்பு சீனாவில் மேற்கொண்ட பல் முதலீடுகளை வேறு ஏதாவது நாட்டிற்கு மாற்றிவிட ஜப்பான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தது. 

ஜப்பானியர்களை பொறுத்தவரை, சீனாவுடன் கலாச்சார தொடர்புடைய நாடு என்பதால் முதலீடுகளில் சீனாவுக்கு முதலிடம் கிடைத்துவந்தது. கோவிட் தொற்றுக்காலத்தில் வேறு ஒரு மாற்று வேண்டுமென்று நினைத்தபோது இந்தியாதான்  முதலீடு செய்ய வசதியான நாடாக இருந்திருக்கிறது. 

ஜப்பான் – இந்தியா கூட்டுறவு அமைப்பின் தலைவராக உள்ள யோஷிதோ சுகா, இந்தியா வந்திருக்கிறார். சி.ஐ.ஐ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசியவர், இந்தியப் பிரதமரை சந்தித்து ஜப்பான் உடனான வர்த்தக உறவுகள் பற்றி பேச இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com