ரத்த கலரில் மாறிய ஆறு ஜப்பான் மக்கள் அதிர்ச்சி!

ரத்த கலரில் மாறிய ஆறு ஜப்பான் மக்கள் அதிர்ச்சி!
Published on

ஜப்பான் ஒகினாவா துறைமுகத்திற்கு அருகே ஓடும் ஆறு ரத்த கலரில் மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஜப்பானின் ஒகினாவா துறைமுகத்திற்கு அருகே அழகான நதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு வரும் மக்கள் நதியின் அழகை ரசித்தவாறு செல்கின்றனர். அப்படி இன்று வந்த மக்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.

ஆறு தண்ணீர் சில மணி நேரங்களிலேயே ரத்த சிவப்பு கலரில் மாறியுள்ளது. இதனை கண்ட மக்கள் இதனை விஷம் என்றும், கொடூரம் என்றும் பேச தொடங்கினர். இந்த பீதி அப்பகுதி மக்கள் முழுவதையும் சேர அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். உண்மை தெரியாத மக்களோ வேறு எதுவும் அசம்பாவிதங்கள் நடந்துவிட்டதாக கருதி வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

ஆனால் நடந்த கதையே வேறு, ஒரு பீர் நிறுவனமான ஒரியன் ப்ரூவரீஸ் உணவுக்கு சாயத்தை பயன்படுத்தி வந்தது. இந்த சாயம் ஆற்றில் கலந்ததால், ஆறு முழுவதும் ரத்த கலரில் மாறியுள்ளது. இது குறித்து அந்த நிறுவனமும் மன்னிப்பு கோரியது. இந்த தகவலை அறிந்த பிறகே பொதுமக்கள் பெருமூச்சு விட்டனர். ஆனாலும் இந்த கெமிக்கலால் பாதிப்பு ஏற்பட்டு விடுமா என்ற பீதியில் மக்கள் நடுங்கி கொண்டிருந்தனர்.

அதற்கு அமெரிக்க சுகாதார அதிகாரிகள், இது உணவில் தண்ணீரை உறிஞ்சுவதற்காக பயன்படுத்தப்படும் Propylene glycol என்ற வேதிப்பொருள் என்றும், இது பாதுகாப்பானது தான் என்றும் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com