விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்க மாட்டேன் - ரவி மோகன் பரபரப்பு பேட்டி..!

Ravi Mohan press meet
Ravi mohan Blaming
Updated on

தமிழ் திரைப்பட நடிகர்ரவி மோகன் இன்று மதியம் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அந்த சந்திப்பில், இந்த பிரஸ்மீட் சினிமா சார்ந்தது அல்ல, தன் தனிப்பட்ட விவகாரம் சார்ந்தது. இத்தனை நாட்கள் நான் பேசாமல் இருந்ததே முட்டாள்தனமாக நான் உணர்கிறேன்! இத்தனை நாட்களாக ரவிமோகன், ஜெயம் ரவி மிகவும் சாஃப்ட்டான மனிதர் ,அவரிடம் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார் புரிந்து கொள்வார் விட்டுக் கொடுத்து விடுவார் என்று தான் எல்லாரும் நினைத்துக் கொண்டுள்ளனர்.

இது அனைத்தும் உண்மைதான், அதுதான் எனது கேரக்டர், நான் அப்படிதான் இதுவரை இருந்தேன். ஆனால், சாதுமிரண்டால் காடு கொள்ளாது.சாதுவாக இருந்த என்னை நிறைய பேர் சீண்ட வேண்டும் என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதுதான் என் ஆபீஸ் நீங்க இங்க வாங்க , மறைமுகமாக எதுவும் வேண்டாம். நேரடியாக இங்கே வாங்க, நேரடியாகவே அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம்.

எத்தனை பேர் சேர்ந்து என்னை கீழே இழுத்தாலும் , இந்த விஷயம் சினிமா பற்றி அல்ல எனது தனிப்பட்ட விவகாரம் என்று நான் முன்னாடியே சொல்லி விட்டேன். அத்தனை பேருக்கும் நான் தயாராகவே இருக்கிறேன். நீங்க எப்ப ஆசைப்பட்டு என்னை 'பஞ்சிங் பேக்காக' வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ?அத்தனை பேரும் இப்போது வாருங்கள். நான் கராத்தேவில் பிளாக் செய்து கிக் அடிக்க போகிறேன்.

நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், "என் படம் இனி எதுவும் ரிலீஸ் ஆகாது எனக்கு டைவர்ஸ் கிடைக்கும் வரை". நான் நடிக்க போவதில்லை , என்னால் நடிக்கவும் முடியவில்லை. எனக்கு நடந்த அவமானங்கள், தேவையில்லாத அவமானங்கள் எதுவும் என்னால் தாங்க முடியவில்லை. அதனால், என் டைவர்ஸ் கிடைக்கும் வரை , என்னை சீண்டி பார்க்கும் வரை.

எல்லோரும் வாருங்கள்! நான் இங்கு தான் இருப்பேன் என்னை சீண்டிப் பாருங்கள். இனி நான் சாது கிடையாது , அதனால் என்ன நடக்குதோ அதை பார்த்துக் கொள்ளலாம். மத்த விஷயங்கள் என் வேலை விஷயங்கள், அதையெல்லாம் எவ்வாறு சரி செய்வது என்பதை நான் பார்த்துக் கொள்வேன்.

இவ்வளவு நாள் என் கூட இருந்த அனைவருக்கும் மிகவும் நன்றி! என்னைக்கு எனக்கு டைவர்ஸ் கிடைக்கிறதோ? என்னைக்கு என்னை சீண்டுவது நிற்கிறதோ? என்னைக்கு இந்த சைபர் புல்லிங் எல்லாம் நிற்கிறதோ? எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எல்லாம் எனக்கும் வரும்.

எனக்கென்று மற்றவர்களைப் போல 25 பேர் கொண்ட குழுவெல்லாம் இல்லை. 23 வருடம் இரவு பகலாக வேலை செய்து 95% வெற்றி படங்களை கொடுத்துள்ளேன். இது சினிமா சார்ந்த விவகாரம் அல்ல. இதை சொல்லிக் காட்டுவது கேவலம் என்றாலும் ஒரு சிலரிடம் சொல்லிக் காட்டுவது கேவலம் அல்ல.

என் வெற்றி என் ரசிகர்களுக்கு தெரியும் , இரண்டாவது படத்திலேயே மாநில விருது பெற்றவன், கலைமாமணி விருதையும் வாங்கியவன். என் அப்பாவும் அண்ணனும் 4 வருடம் வேலை செய்யாத போது, அதிகாலையிலேயே எழுந்து நான் ஷூட்டிங் சென்றவன், என் குடும்பம் தான் எனக்கு எல்லாமே. அவர்களை ஏதேனும் சொன்னாலும் சீண்ட வேண்டும் என்று நினைத்தாலோ? நான் சும்மா இருக்க மாட்டேன்.

பேராண்மை படத்தில் "பெண்களின் சக்தி மிகப் பெரியது அதை வீணடிக்க கூடாது" என்று பேசியவன் நான். பெண்களுக்கு எதிரானவன் நான் கிடையாது, என் அம்மா என்னை அப்படி வளர்க்கவில்லை. நான் அமைதியாக இருப்பது, நான் சொல்வதெல்லாம் உண்மை என்று நிரூபிக்க வேண்டும் என்றுதான்.

நான் 14 வருடம் என் முந்தைய வாழ்க்கையில் இருந்தேன், அப்போது சொல்லவில்லையா? நான் கடவுள் என்று, நான் ஒரு நாள் கூட திட்டியது இல்லை என்று. எல்லா ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது ஒவ்வொன்றும் சர்ப்ரைஸாக வரும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் எனக்காக. என்று ரவி மோகன் பேசி முடித்தார்.

logo
Kalki Online
kalkionline.com