ஜே.இ.இ. தேர்தவில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் முகுந்த் பிரதீஷ்!

முகுந்த் பிரதீஷ்
முகுந்த் பிரதீஷ்
Published on

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களாக என்.ஐ.டி(NIT), ஐ.ஐ.டி(IIT) உள்ளிட்ட கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ (Joint Entrance Examination) எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஜே.இ.இ. முதன்மை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ், அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார்.

பாளையங்கோட்டை தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ் 300-க்கு 300 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். அகில இந்திய தரவரிசையில் 23 மாணவர்களில் ஒருவராக சாதனை புரிந்த தமிழ்நாடு மாணவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்வு முகாமை நடத்தும் இந்த தேர்வானது மெயின் (முதல்நிலை) மற்றும் அட்வான்ஸ் (முதன்மை தேர்வு) என இரண்டு கட்டங்களாக நடைபெறும். இந்த நிலையில் இந்தாண்டிற்கான 2024 ஆண்டிற்கான ஜே.இ.இ தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

ஜே.இ.இ நடத்திய முதன்மை தேர்வில் 11 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார். இதில் 70 ஆயிரத்து 48 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ், அகில இந்தியத் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற 23 மாணவர்களில் இவர் ஒருவரே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

இவரது தந்தை ஸ்ரீகாந்த் தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிலையத்தில் பொறியாளராகவும், அம்மா தபால் துறையில் உதவியாளராக இருந்து விருப்ப பணி ஓய்வு பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து வெற்றிபெற்ற மாணவர் முகுந்த் பிரதீஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜே.இ.இ தேர்வில் முதல் இடம் பிடிப்பவர்கள் எப்படி இதனைச் சாத்தியப்படுத்துகிறார்கள் எனப் பல நேரங்களில் நான் யோசித்து இருக்கிறோன். ஆனால், அந்த இடம் தற்போது தனக்குக் கிடைத்துள்ளது.

இந்த சந்தோஷத்தை நான் எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த தேர்வில் முதல் இடம் பிடிப்பதற்காகத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைப்பேசி வாயிலாக வாழ்த்துக் கூறியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

வரவிருக்கும் காலத்தில் செமி கண்டக்டர் (semi conductor) பொறியாளராகப் படிக்க ஆசைப்படுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com