உலகளவில் பேசுப்பொருளாக மாறிய ஜெப்ரின் வழக்கில் புதிய திருப்பம்! என்ன நடந்தது? யார் இவர்?

Jeffrey Epstein and Nadia Marcinkova
Jeffrey Epstein and Nadia Marcinkova

மெரிக்காவை சேர்ந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதுச் செய்யப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் சிறைச்சாலையிலேயே தற்கொலை செய்துக்கொண்டார். இந்நிலையில், அவருடைய ரகசிய ஆவணங்களை வெளியிட்ட நிலையில் பகீர் கிளப்பும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது அந்த ரகசிய ஆவணத்தில் அமெரிக்க முன்னாள் பிரதமர் இருவருக்கு தொடர்புள்ளதாக தெரிய வருகிறது. இந்த ஆவணங்கள் வெளியான நிலையில் நோபல் பரிசு வென்ற நாடியா முராத் காணாமல்போனதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாலியல் கொடுமை செய்யும் வழக்கில் ஜெப்ரி 2005ம் ஆண்டு கைதாகி 13 மாதங்களிலேயே வெளிவந்தார். மீண்டும் ஜெப்ரி 2019ம் ஆண்டு சிறுமிகளைக் கடத்தி பாலியல் கொடுமை செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அந்த ஆண்டே ஜெப்ரி சிறையில் மர்மமான முறையில் இறந்துக் கிடந்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் அவரைப் பற்றி வெளியான ரகசிய ஆவணங்களில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மற்றும் அவரது மனைவியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அந்த ஆவணங்களில் ஒரு பெண்ணின் வாக்குமூலம் இடம்பெற்றுள்ளது. அதில் அந்தப் பெண் கூறியது என்னவென்றால், ‘’அமெரிக்கா முன்னாள் பிரதமர் பில் கிளிண்டன், இளவரசர் ஆண்ட்ரூ, இங்கிலாந்து வணிக அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்டோரின் அந்தரங்க வீடியோக்களை ஜெப்ரின் வைத்திரிக்கிறார். எனது தோழி ஒருவரையும் ஜெப்ரி அழைத்து சென்றார். என் தோழி கிளிண்டன், ரிச்சர்ட், பிரான்சன் ஆகியோருடன் இருக்கும் அந்தரங்க வீடியோக்களை ஜெப்ரி படம் பிடித்து வைத்திருக்கிறார். அந்த வீடியோ என் தோழியிடம் உள்ளது.

மேலும் அந்த வீடியோவில் ஜெப்ரி இல்லாதது போல் தெளிவாக எடுத்துள்ளார்’’. இதனையடுத்து அமெரிக்க முன்னாள் பிரதமர் ட்ரம்பும் சில பெண்களிடம் அவ்வப்போது அந்தரமாக இருந்ததாக கூறினார். இதற்கு முன்னரே அந்தப் பெண் ஜெப்ரின் மீது வழக்கும் தொடர்ந்தார். ஆனால் சில காலங்களிலேயே அது தனக்கு மிகவும் பிரச்சனைகள் கொடுப்பதாக கூறி புகாரைத் திரும்பப்பெற்றுவிட்டார்.

jeffrey epstein
jeffrey epsteinimage.cnbcfm.com

இந்த ஆவணங்கள் வெளியான நிலையில் நோபல் பரிசு வாங்கிய நாடியா காணவில்லை. இந்த வழக்கிற்கும் நாடியாவிற்கும் என்ன சம்பந்தம் இருக்கும் என்ற கேள்வி கண்டிப்பாக தோன்றும். அதற்கு நாடியா யாரென்று முதலில் பார்ப்போம்.

நாடியா யூகோஸ்லேவியாவில் வளர்ந்தவர். சரியாக 2001ம் ஆண்டு நாடியாவின் 15 வயதில் ஜெப்ரின் அவரை மாடல் ஆக்குகிறேன் என்று கூறி அமெரிக்காவிற்கு தன்னுடன் அழைத்துச் சென்றார். ஆனால் ஜெப்ரியின் மாடல் ஏஜென்ஸியில் புத்தகங்களைப் பராமரிக்கும் மாரித் ஸ்க்விஸ் என்பவர் நாடியா மாடலாக இருக்கவே இல்லை. அவரை பாலியலுக்காக பலரிடம் ஜெப்ரின் காசுக்கு விற்றார் என்று கூறினார்.

ஜெப்ரி பாலியல் கொடுமைப் படுத்திய சிறுமிகளில் அவரும் ஒருவராக இருந்திருக்கிறார். பிறகு 2008ம் ஆண்டு அவர் ஜெப்ரியிடமிருந்து பாலியல் தொல்லையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஒரு வேலையில் நியமிக்கப்பட்டார். அப்போதுதான் ஒரு பைலட்டாக மாறினார் நாடியா. ஜெப்ரியின் தனி விமானத்தின் பைலட்டாக ஜெப்ரியுடன் உலகம் முழுவதும் சுற்றிவந்தார். 2017ம் ஆண்டு ஒரு மாடலாகவும் பைலட்டாகவும் கம்பீர பெண்ணாக மாறினார் நாடியா. AVI லூப் நிறுவனத்தின் CEO வாக நியமிக்கப்பட்டார் நாடியா.

மேலும் ஜெப்ரியின் சகோதரரின் ரியல் எஸ்டேட்டிலும் வேலை செய்தார். ஜெப்ரி கைது செய்யப்பட்டதிலிருந்து அவர் இறப்பதற்கு முன்னர் வரை நாடியா சுமார் 90 முறை அவரை பார்க்கச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் நாடியா காணமால் போனது மாபெரும் சர்ச்சையாக இப்போது எழுந்துள்ளது. அவரை யாரும் கடத்தியுள்ளனரா? அல்லது அவராவே வழக்கில் ஈடுப்படக் கூடாது என்று மறைந்துவிட்டாரா? போன்ற கேள்விகள் எழுந்து வருகிறது. இது தற்போது அமெரிக்காவையே உலுக்கி வரும் சம்பவமாக இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com