குஜராத்தில் ஜிக்னேஷ் மேவானி வெற்றி: காங்கிரஸ் ஆறுதல்!

 ஜிக்னேஷ் மேவானி
ஜிக்னேஷ் மேவானி
Published on

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தாலும், அக்கட்சி சார்பாக போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் மட்டும் வென்று படுதோல்வியை சந்தித்தாலும் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட பட்டியலின் செயல்பாட்டாளரான ஜிக்னேஷ் மேவானியின் வெற்றி கவனம் பெற்றுள்ளது.

வட்கம் தொகுதியில் போட்டியிட்ட அவர் 94,765 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். மேவானியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மணிபாய் 89,837 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

ஜிக்னேஷ் மேவானி (41), ராஷ்ட்ரிய தலித் அதிகார மஞ்ச் என்ற அமைப்பின் மூலம் பட்டியலின் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுபவர்.

குறிப்பாக பாஜக அரசை தீவிரமாக விமரிசிப்பவர். மேலும் முன்பு பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட வரும் கூட! கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் வட்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் மணிபாயை விட 4,928 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் ஜிக்னேஷ். இதையடுத்து ஜிக்னேஷின் வெற்றி காங்கிரஸ் கட்சியை சற்றே ஆறுதலடைய செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com