
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையானது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அதிகமாக உள்ளது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு குழந்தைகளும், மாணவர்களும் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். இணைய வசதி தாராளமாக கிடைக்கும் நிலையில், ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் போது அதில் வரும் விளம்பரங்கள் குழந்தைகளுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இந்நிலையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ‘ஜியோ பாரத்’ என்ற போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ பாரத் போனை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகள் மற்றும் பெரியோர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு மலிவான விலையில் ஜியோ பாரத் போன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மொபைல் காங்கிரஸ்-2025 மாநாட்டில் ஜியோ பாரத் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நீண்ட பேட்டரி ஆயுள், நிகழ் நேர இருப்பிட தகவல்கள் மற்றும் அழைப்பு மேலாண்மைக் கட்டுப்பாடுகள் போன்ற பல அம்சங்களுடன் ஜியோ பாரத் போன் அறிமுகமாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயனர்களின் பாதுகாப்பை முக்கிய நோக்கமாக கருத்தில் கொண்டு, ஜியோ போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜியோ நிறுவனம் மேலும் கூறுகையில், “ தற்போது சந்தையில் கிடைக்கும் ஸ்பான் ஃபோன்களை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கவனிச்சிதரர்களும் ஆபத்துகளும் நேரிடுகின்றன. இந்நிலையில் குழந்தைகள் மற்றும் பெரியோர்களை ஸ்மார்ட்போன்களின் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க விரும்பும் பெற்றோர்களுக்கு, ஜியோ பாரத் போன் மிகச்சிறந்த மாற்றாக இருக்கும்.
ஜியோ பாரத் போன்களில் நான்கு முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பாதுகாப்பு அம்சங்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்” என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நான்கு பாதுகாப்பு அம்சங்கள்:
1. இருப்பிட கண்காணிப்பு (Location Monitoring). இதன் மூலம் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் செல்லும்போது அவர்களின் நிகழ் நேர இருப்பிடத்தை பெற்றோர்கள் கண்காணிக்க முடியும்.
2. பயன்பாட்டு மேலாளர் (Usage Manager): இந்த அம்சத்தின் மூலம் தெரியாத நபர்களின் அழைப்புகளை தடுத்தல், நம்பகமான அழைப்புகளை மட்டும் அனுமதித்தல் மற்றும் கவனச்சிதறல்களை கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
3. போன் மற்றும் சேவை ஆரோக்கியம் (Phone and service health): இணைய வசதி மற்றும் பேட்டரி அளவு ஆகியவற்றின் மிக நேர கண்காணிப்பை பெற்றோர்களால் பார்க்க முடியும். இதன் மூலம் ஜியோபாரத் போன் போனில் பேட்டரி தீர்ந்து விடுவது மற்றும் தவறிய அழைப்புகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
4. எப்போதும் கிடைக்கும் (Always available): ஜியோ பாரத் போன்களில் குறைந்தபட்சம் ஏழு நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும் என்பதால், முக்கியமான நேரங்களில் போன் செயல்படுவது உறுதி செய்யப்படும். மேலும் போன்களை அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அமேசான், ஜியோ ஸ்டோர்கள், ஜியோமார்ட், முன்னணி மொபைல் கடைகள் மற்றும் இன்ஸ்டாமார்ட் போன்ற இடங்களில் ஜியோ பாரத் போன்கள் பரவலாகக் கிடைக்கின்றன. இந்தச் சாதனங்களின் விலை ரூ.799 இலிருந்து தொடங்குகிறது. அதிக வசதிகள் கொண்ட மற்றும் அதிகப்படியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் பிடிக்காத பல இந்திய குடும்பங்களுக்கு ஜியோ பாரத் போன்கள் உதவியாக இருக்கும்.