குரூப் 4 பணியிடங்கள்... ஜூலை 20 முதல் கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பு!

TNPSC
TNPSC

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 20ஆம் தேதி முதல் பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. 18 லட்சம் பேர் பங்கேற்ற இந்தத் தேர்வுக்கான முடிவு, கடந்த மார்ச் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது.

முதலில் 7 ஆயிரத்து 301 பணியிடங்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் 10 ஆயிரத்து 178ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தகுதி பெற்ற தேர்வர்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

முதல் கட்டமாக கிராம நிர்வாக அலுவலர் , இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

தேர்வர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி மற்றும் விபரங்கள் அவர்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வர்கள் ஏற்கனவே அனுப்பி வைத்த சான்றிதழ்களின் உண்மை தன்மையின் அடிப்படையில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, பணி ஒதுக்கீடு செய்யப்படும்.
மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில் திருப்தி இல்லை என்றால், அவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com