உடனே விண்ணப்பீங்க..! இந்திய கப்பல் போக்குவரத்து நிறுவனத்தில் வேலை; ரூ.1.60 லட்சம் வரை சம்பளம்..!

ship
ship
Published on

மத்திய அரசு நிறுவனத்தில் பணி வாய்ப்பை பெற அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. மேனேஜ்மெண்ட், நிதி, எச்ஆர், பொறியியல், சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 75 காலிப்பணியிடங்களுக்கு உதவி மேனேஜர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பதவியின் பெயர் எண்ணிக்கை

மேனேஜ்மெண்ட் 20

நிதி 8

HR 4

சட்டம் 2

பொறியியல் 15

தீயணைப்பு பாதுகாப்பு 2

கடல்சார் கட்டடக்கலை 2

நிறுவன செயலாளர் 2

நிதி 10

HR 6

மக்கள் தொடர்பியல் 2

மற்றவை 2

வயது வரம்பு:

அதிகபடியாக வயது வரம்பு 27ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், எஸ்சி, எஸ்டி, ஒபிசி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கான வயது வரம்பு தளர்வு பின்பற்றப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கரண்ட் பில் அதிகமா வருதா..?மின்சாரத்தைச் சேமிக்க என்ன பண்ணலாம்?
ship

கல்வித்தகுதி

  • மேனேஜ்மெண்ட் மற்றும் HR பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு முழு நேர எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது பதவி சாரந்த பிரிவுகளில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

  • நிதி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு CA/CMA முடித்திருக்க வேண்டும்.

  • சட்டப்பிரிவிற்கு 3 அல்லது 5 வருட சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

  • பொறியியல் பிரிவில் உள்ள பணியிடங்க்ளுக்கு சிவில், எலெக்ரிக்கல், மெக்கானிக்கல், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் BE/B.Tech முடித்திருக்க வேண்டும்.

  • தீயணைப்பு பாதுகாப்பு, கடல்சார் கட்டடக்கலை பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு அதற்கான பொறியியல் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

  • நிறுவன செயலாளர் பதவிக்கு CS தகுதி பெற்றிருக்க வேண்டும்.

  • நிர்வாகிகளுக்கான பிரிவில் உள்ள நிதி சார்ந்த பதவிக்கு BBA/ BMS அல்லது நிதி சாரந்த படிப்புகள் முடித்தவர்கள், எம்பிஏ, மாஸ் கம்யூனிகேஷன், இந்தி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி திறன் அவசியம்.

சம்பள விவரம் :

உதவி மேனேஜர் பணியிடங்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரையும், நிர்வாகிகள் பதவிக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும். எழுத்துத் தேர்வு 120 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கொண்டு நடைபெறும். நுண்ணறிவு, லாஜிக்கல், கணினி திறன், ஆங்கிலம், உளவியல் சோதனை ஆகியவற்றை கொண்டு தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி அடைபவர்கள் அடுத்தக்கட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.shipindia.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிகக் வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கடைசிநாள்: 27.9.2025

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com