அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டிசம்பர் 13 ஆம் தேதி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரே பாலின திருமணங்களுக்கான கூட்டாட்சி பாதுகாப்பு வழங்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார்.
ஜோ பைடன் பிரதமராக பதவி ஏற்கும் முன்னர், துணைத் தலைவராக இருந்த காலத்தில் இருந்தே ஒரு பொது நிலைப்பாட்டை எடுத்தார். 2015 ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே, நாடு முழுவதும் அத்தகைய திருமணங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஒரே பாலின சங்கங்களை ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே பாலின உறவுகளை சில ஆண்டுகளாக உலக நாடுகள், முக்கியமாக மேற்கத்திய நாடுகள் சட்டபூர்வமாக ஆதரித்து, அங்கீகரித்து வருகின்றன. LGBTQ+ சமூகத்தினரை அவர்களது இயற்கையான இயல்புகளை மற்றவர்கள் புரிந்து அவர்களை அப்படியே ஏற்கும் மனநிலை பலருக்கும் வந்து விட்டது. தற்போது அமெரிக்க இதை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது.
மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் அரசாங்கம் எந்தத் தலையீடும் செய்யக்கூடாது. அது சரியாக இருக்காது என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியினர் இரு அவைகளிலும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆண்டு இறுதி அமர்வின் போது இந்த சட்டத்தை அமல்படுத்த ஆர்வமாக இருந்தனர்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் பாராளுமன்றத்தைக் குடியரசுக் கட்சியினர் கட்டுப்படுத்துவார்கள், அப்போது அவர்கள் ஒரே பாலின ஜோடிகளுக்கான உரிமைகளை மாற்றியமைக்கலாம் என்கிற நிலை இருப்பினும், தற்போது இந்த சட்டம் அமலில் வந்துள்ளது.