ஆண் குழந்தைக்கு தாயானார் ஜாய் கிரிசில்டா... குவியும் வாழ்த்து..!

madhampatty joy
madhampatty joy source:maalaimalar
Published on

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் தெரிவித்து வந்த ஆடைவடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சமையல் கலை வல்லுநர் மாதம்பட்டி ரங்கராஜ். குறிப்பாக பிரபலங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தனது குழுவுடன் கேட்டரிங் செய்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ரம்யா பாண்டியன் உள்ளிட்டோரின் இல்ல விழாவின் இவரின் சமையல் தான்.

2019ம் ஆண்டு தமிழில் வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து பென்குயின் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரமாக தோன்றினார். மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அவரது மனைவி பெயர் ஸ்ருதி. கடந்த சில காலமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியிடம் இருந்து பிரிய போவதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்துகொண்டதாகவும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தீயாக பரவு மாதம்பட்டி ரங்கராஜ் எந்த ஒரு பதிலும் சொல்லாமல், நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வந்தார்.

இப்படி இருக்கையில் ஒரு நாள் ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து நேற்று மாதம் பராமரிப்பு செலவுக்காக மாதம்பட்டி ரங்கராஜ் ரூ.6.50 லட்சம் தர வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நேற்று இரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாய் கிரிசில்டா அறிவித்துள்ளார்.

இந்த செய்தி இணையத்தில் தீயாக பரவ, மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தைக்கு பதில் சொல்ல வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு மாதம் பட்டி ரங்கராஜ் என்ன பதில் சொல்ல போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com