ஆதி திராவிடர் இல்லத்தில் விருந்துண்ட ஜே பி நட்டா!

ஆதி திராவிடர் இல்லத்தில் விருந்துண்ட ஜே பி நட்டா!

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா  நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் கோவை வந்தார். அப்போது அன்னூர் அருகே நல்லி செட்டிபாளையம் கிராமத்தில் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மூர்த்தி, விஜயா தம்பதியினரின் வீட்டில் ஜே பி நட்டா விருந்துண்டார். 

பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மத்திய தகவல் தொலைதொடர்பு இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஆகியோர் மூர்த்தியின் இல்லத்துக்கு வந்தபோது, அவர்களை கிராம மக்கள் பூ தூவி வரவேற்றனர்.

பின்னர் வீட்டினுள் நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. விஜயா தன் கைப்பட சமைத்த சப்பாத்தி, பருப்பு, வடை, பாசிப்பயிறு சுண்டல், பஜ்ஜி உள்ளிட்ட ஆறு வகை உணவுகளை நட்டா ரசித்து உண்டார். இதையடுத்து நல்லி செட்டிபாளையம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com