இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!

இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!
Published on

டந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, ‘எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?’ என்று மோடி சமூகம் குறித்து அவதூறாகப் பேசியதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி சூரத் மாவட்ட கூடுதல் செஷன்ஸ்  நீதிமன்றத்தில் ஆஜராகி, ராகுல் காந்தி  மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்த சூரத் மாவட்ட செஹன்ஸ் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்தது.

அதைத் தொடர்ந்து, அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிராக  குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்யப்பட்டது. அந்த மனுவில், தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒரு மனுவும், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் வரை, குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தியின் இந்த இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட குஜராத் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மற்றொரு மனுத்தாக்கல் செய்திருந்தார். ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை கோரிய வழக்கில் குஜராத் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com