ரேஷன் கார்டு இருந்தால் போதும்: இலவச அரசு திட்டங்கள் என்னென்ன கிடைக்கும் தெரியுமா?

தமிழகத்தில் ரேஷன் அட்டை அடிப்படையில் கிடைக்கக்கூடிய சில நல திட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
ration card
ration card
Published on

ரேஷன் கார்டு சமூக நலத்திட்டங்களில் ஒரு முக்கிய அங்கமாகும். தமிழகத்தில் கடைக்கோடி மக்களுக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெறவும், பிற அரசு திட்டங்களில் பயனடையவும் ரேஷன் கார்டு மிக முக்கியமான அங்கீகரிக்கப்பட்ட ஆவணமாக பார்க்கப்படுகிறது. சுருக்கமாக, சொல்வதென்றால் ரேஷன் கார்டு என்பது ஒரு குடும்பத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அரசின் உதவிகளைப் பெறுவதற்கும், பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைவதற்கும் ஒரு முக்கிய ஆவணமாகும்.

தமிழகத்தில் ரேஷன் கார்டு என்பது உணவுப் பொருட்கள் வாங்கும் அடையாள அட்டையாக மட்டுமல்ல, மகளிர் உரிமைத்தொகை, ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PMJAY) மருத்துவக் காப்பீடு போன்ற நலத்திட்டங்களை அணுகுவதற்கான அடிப்படைத் தகுதியாகவும் பார்க்கப்படுகிறது.

சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளைச் சென்றடையச் செய்வதில் தமிழக அரசு, ரேஷன் கார்டை முக்கிய ஆவணமாகப் பயன்படுத்துகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ரேஷன் கார்டு அடிப்படையில் கிடைக்கக்கூடிய சில நல திட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள்:
தனியாக வசிக்கும் பெண்களுக்கு புதிய ரேஷன் கார்டு: தமிழக அரசு அறிவிப்பு!
ration card

* ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் அல்லது இலவசமாகப் வாங்க முடியும். இது குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. மேலும் இது ஏழை மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.

* ரேஷன் கார்டு ஒரு முக்கியமான அடையாளச் சான்றாகவும் பயன்படுகிறது. இது பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களைப் பெறுவதற்கும், பிற அரசு சேவைகளைப் பெறுவதற்கும் பயன்படுகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவி போன்ற அரசு வழங்கும் திட்டங்களில் பயனடையலாம்.

* முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை போன்ற அரசின் நல திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு மிக முக்கிய ஆவணமாக செயல்படுகிறது. இத்திட்டங்கள், பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு தேவையான நிதி ஆதாரத்தை வழங்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு உதவுகிறது.

* தமிழக அரசின் முக்கியத் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவியை பெறுவதற்கு முதன்மைத் தகுதிகளில் ஒன்றாக ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்த திட்டம், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவி செய்கிறது.

* பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெற உதவுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற, ரேஷன் கார்டு வைத்திருப்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். ரேஷன் கார்டு இருந்தால், நீங்கள் ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுக்கு விண்ணப்பித்து பயன்பெற முடியும்.

* இது மட்டுமில்லாமல் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச வேட்டி, சேலை, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
ரேஷன் கார்டு பெற இணைய வழியில் விண்ணப்பிப்பது எப்படி?
ration card

* வெள்ளம், புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது, தமிழக அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் மற்றும் நிதி உதவிகளைப் பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கியமான அடையாளச் சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com