#JUST IN: 1 நொடியில் பணப் பரிமாற்றம்.! Yatri Pay செயலியை அறிமுகப்படுத்தும் தெற்கு ரயில்வே.!

YatriPay Indroduce on April 10
Southern Railway
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

ரயில் பயணிகளின் பயணத்தை விரவாகவும், எளிதாகவும் மாற்ற தெற்கு ரயில்வே பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வெறும் 1 நொடியிலேயே பணப் பரிமாற்றத்தை செய்யக் கூடிய புதிய YatriPay செயலியை வருகின்ற ஏப்ரல் 10-ம் தேதி முதல் அறிமுகப்படுத்துகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது தெற்கு ரயில்வே நிர்வாகம்.

இதையும் படியுங்கள்:
#BIG BREAKING: சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை..!
YatriPay Indroduce on April 10

தெற்கு ரயில்வே வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஒவ்வொரு பயணிக்கும் தெற்கு இரயில்வேயில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. எங்களின் Solana தொழில்நுட்பத்தில் இயங்கும் YatriPay பணப்பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்துகிறோம். வருகின்ற ஏப்ரல் 10 முதல் RailOne செயலி உட்பட அனைத்து இடங்களிலும் இது பயன்பாட்டிற்கு வருகிறது.

ஒவ்வொரு நடைமேடையிலும் இருக்கும் ஒவ்வொரு பயணிக்கும் ஏற்ற வகையில் வேகமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் ​1 விநாடிக்கும் குறைவான நேரத்தில் பணப்பரிமாற்றத்தை நிகழ்த்த முடியும். ​

ஏனென்றால், முன்னேற்றம் என்பது நாம் இயக்கும் இரயில்களில் மட்டுமல்ல; நாம் ஒவ்வொரு பயணியையும் எவ்வாறு கவனித்துக் கொள்கிறோம் என்பதிலும் இருக்கிறது. பெருமையுடன் முன்னேற்றத்தை நோக்கி!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: ஒரே இரவில் ஈரானை அழிப்போம்.! எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.!
YatriPay Indroduce on April 10
logo
Kalki Online
kalkionline.com