’’My Lord” என்பதற்கு பதிலாக “ Sir…! Just sir..”வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுரை!
உச்சநீதிமன்ற நீதிபதியான நரசிம்மா ஒரு வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞரிடம் ”My Lord” என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதற்கு பதில் சார் என அழைத்தால் போதும் என அறிவுரை கூறியிருப்பது தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு இந்திய பார் கவுன்சில், எந்த ஒரு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் வழக்காடும்போது ”My Lord” என்று அழைக்கவேண்டாம் என்றும் அதற்கு பதில் சார் என்றுதான் அழைக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை மேற்கோள்காட்டி நீதிபதி எச்.எல்.தத்து ”My Lord” என்று அழைக்கவேண்டாம் என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து ”My Lord” என்று அழைக்கவேண்டாம் என்ற தீர்மானம் பற்றி நீதிபதி ஷிவ் சாகர் திவாரி தலைமையில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து கருத்து தெரிவித்த ஷிவ் சாகர் திவாரி Lord என்றால் அடிமை என்று பொருள். இங்கு யாருக்கும் யாரும் அடிமையில்லை. ஆகையால் இனி இந்திய நீதிமன்றங்களில் நீதிபதிகளை ”My Lord” என்று அழைக்கவேண்டாம். சார் என்று அழைப்பதே சிறந்தது என்றார். ஆனால் தற்போதுவரை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் நீடித்துவருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் எப்போதும் வாரத்தில் புதன்கிழமை நடைபெறும் வழக்கு விசாரணைக்காக நீதிபதி நரசிம்மா தலைமை தாங்கினார். அப்போது வழக்கறிஞர் ஏ.எஸ்.போப்பண்ணா My lord மற்றும் your lord என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அதற்கு நீதிபதி நரசிம்மா, “ இன்னும் எத்தனை முறைத்தான் My lord மற்றும் your lord என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவீர்கள். அதற்கு சார் என்று அழைக்கலாமே. இனி சார் என்று அழைத்தால் என் சம்பளத்தின் பாதியை உங்களுக்கு தருகிறேன் என்றும் கூறினார்.
நீதிபதி நரசிம்மா இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. அதேபோல், நீதிதுறையில் ”My lord” என்ற வார்த்தையை பயன்படுத்துவதை குறித்த விவாதத்தை தட்டியெழுப்பியுள்ளது.