கடலுக்கு அடியில் செஸ் போட்டி; சென்னையில் புதுமை!

கடலுக்கு அடியில் செஸ் போட்டி; சென்னையில் புதுமை!

Published on

மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடந்து வரும் நிலையில் அதை வரவேற்கும் வகையில் புதுமையாக சென்னை நீலாங்கரை கடலுக்கு அடியில் ஆழ்கடல் நீச்சல்வீரர்கள் செஸ் விளையாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-இதுகுறித்து புதுச்சேரி மற்றும் சென்னையில்  'டெம்பிள் அட்வென்சர்' என்ற ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பள்ளி நடத்தும் அரவிந்த்  தெரிவித்ததாவது;

எங்கள் நீச்சல் பயிற்சிப் பள்ளியில் உள்நாட்டவர் மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பயிற்சி பெற்று வருகின்றனர். ஏற்கனவே எங்கள் நீச்சல் வீரர்கள் உலக யோகா தினம், சர்வதேச கிரிக்கெட் போட்டி, கடல் தூய்மை போன்ற குறிப்பிட்ட சிறப்பு தினங்களில் அவற்றைப் பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை ஆழ்கடலில் நிகழ்த்தியுள்ளனர். 

அந்த வகையில் செஸ் ஒலிம்பியாட்டை வரவேற்கும் வகையில், இந்த புதுமையான செஸ் நிகழ்ச்சியை அரங்கேற்றினோம். சென்னை நீலாங்கரை கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்துக்குச் சென்று நீச்சல்வீரர்கள் செஸ் விளையாடினார்கள். இந்த 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் எங்களுடைய வாழ்த்துக்களை இப்படி வித்தியாசமாகத் தெரிவித்ததில் பெருமை கொள்கிறோம்.

-இவ்வாறு நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com