பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி: இன்று அறிமுகம்!

பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி: இன்று அறிமுகம்!
Published on

பெண்களின் கர்ப்பப்பை வாயிலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுப்பதற்கான மருந்து இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப் படுகிறது. நாட்டின் மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையும், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனமும் இணைந்து இந்த தடுப்பூசியை இன்று அறிமுகம் செய்கிறது.

-இதுகுறித்து ஈரம் இன்ஸ்டிடியூட் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறியதாவது:

இந்தியாவில் பெண்களின் கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளே இதுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது இதற்கான தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு கழகம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அத்தடுப்பூசிக்கான சோதனைகள் 2018-ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியாவின் 12 இடங்களில் மேற்கொள்ளப்பட்டன.

அதன் 2-ம் மற்றும் 3-ம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், ஜூன் 8-ம் தேதியன்று இத்தடுப்பூசியை இந்தியாவில்  தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்படுவது பெருமைக்குரியது.

-இவ்வாறு டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com