காங்கிரஸ் தலைவர் பதவி: சசி தரூர் போட்டி?

காங்கிரஸ் தலைவர் பதவி: சசி தரூர் போட்டி?

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம்  தேதி நடைபெற உள்ளது. இதற்கான குழு அமைக்கப்பட்டு தேர்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் சோனியா காந்தி சார்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்ட நிலையில், அக்கட்சியின் அதிருப்தி தலைவர்கள் சார்பாக சசி தரூர் போட்டியிடுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் சசி தரூர் தெரிவித்ததாவது;

அரசியலில் இருந்தால் இந்தி பேச தெரிந்திருக்க வேண்டும். தென்னிந்தியாவை சேர்ந்தவர்களும் இந்தி பேசுகின்றனர். நானும் இந்தி பேசுவேன். அந்த வகையில் காங்கிரஸ் தலைவராக நான் ஆக வேண்டும் எனில் அதை மற்ற தலைவர்கள் வாக்களிப்பின் மூலம் நிரூபிக்க வேண்டும்

-இவ்வாறு இந்தியில் சசி தரூர் பதிலளித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட சசி தரூர் தகுதியானவர் என்று கேரளா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com