பாலியல் குற்றச்சாட்டு: கர்நாடக மடாதிபதி கைது!

பாலியல் குற்றச்சாட்டு: கர்நாடக மடாதிபதி கைது!

Published on

கர்நாடகா, சித்ரதுர்கா மாவட்டத்தில் லிங்காயத்து சமூகத்தை சார்ந்த ஜகத்குரு முருக ராஜேந்திர வித்யபீட மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருக சரணரு ஆவார்.

இவர் மடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளியில் பயின்ற இரு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த வாரம் புகார் அளிக்கப் பட்டது. இது தொடர்பாக அந்த மடாதிபதிக்கு எதிராக கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அவர் இன்று கைது செய்யப் பட்டுள்ளார்.

-இதுகுறித்து கர்நாடக மாநில ஏடிஜிபி அலோக் குமார் கூறியதாவது:

லிங்காயத்து மடாதிபதியான சிவமூர்த்தி முருக சரணரு மகாராஷ்டிராவிற்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் ஹாவேரி மாவட்ட எல்லையில் அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவர் கர்நாடகாவை விட்டு வெளியேறாத வகையில் விமான நிலையங்களில் லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

அதனையடுத்து அவர் மீண்டும் மடத்திற்கு திரும்பினார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு இன்று  நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கர்நாடகாவில் பெரும் செல்வாக்கு படைத்த மடத்தின் மடாதிபதி கைது செய்யப் பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com