டிடிவி தினகரனுக்கு  உடல் நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி!

டிடிவி தினகரனுக்கு  உடல் நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி!

Published on

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நேற்றிரவு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிடிவி தினகரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் சென்றிருந்தபோது, உணவு ஒவ்வாமை காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:

எனக்கு சிறிய அளவிலான உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com