சிதம்பரத்தில் வெறும் 10 ரூபாய் மட்டுமே வாங்கிகொண்டு சிகிச்சையளித்து வந்த டாக்டர் அசோகன், மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த பிரபல டாக்டரான அசோகன், சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக, வெறும் 10 ரூபாய் மட்டுமே வாங்கிகொண்டு மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். சிதம்பரம் மட்டுமன்றி சுத்துபட்டு ஊர்களிலும் இவர் மிகப் பிரபலம். அங்கிருந்தும் ஏராளமானோர் வந்து டாக்டர் அசோகனிடம் மருத்துவம் பார்த்துள்ளனர். கொரோனா ஊரடங்கு சமயத்திலும் இவர் மருத்துவம் பார்த்தது மிகப் பெரிய சேவை.
இந்நிலையில் நேற்று மாலை டாக்டர் அசோகனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்செய்தியைக் கேட்டு சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். டாக்டர் அசோகன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.