பாரத் ஜோடா யாத்ரா: ராகுல் காந்தி இன்று சென்னை வருகை!

பாரத் ஜோடா யாத்ரா: ராகுல் காந்தி இன்று சென்னை வருகை!
Published on

தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோடா யாத்ரா' என்ற பெயரில் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை நடைபயணம் தொடங்கவுள்ளார். அதற்காக இன்று ராகுல் காந்தி சென்னை வரவிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவிக்கப் பட்டதாவது;

ராகுல் காந்தி நாளை கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து பாரத் ஜோடா யாத்ரா நடை பயணத்தை தொடங்குகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நடைபயணத்தை தேசியக்கொடி வழங்கி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அங்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கி.மீ தூரத்தை 150 நாட்களில் கடக்கிறார். இதற்காக, இன்று மாலை 5.15 மணிக்கு டெல்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ராகுல் காந்தி சென்னை வருகிறார்.

நாளை (செப்டம்பர் 7) காலையில், சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

அதன்பின்பு, சென்னை திரும்பி, காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். குமரி மாவட்டத்தில் நாளை தொடங்கி 8, 9, 10 தேதிகளில் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி 11ம் தேதி காலை கேரள மாநிலம் செல்கிறார்.

கன்னியாகுமரி வருகை தரும் ராகுல்காந்தி முன்னதாக நாளை மாலை 4 மணியளவில் தனி படகில் சென்று திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவிடம், காமராஜர் மண்டபம் ஆகியவற்றில் மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்திவிட்டு நடைபயணத்தை தொடங்குகிறார்.

–இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளன.

இந்த நடை பயணத்தில் ராகுல் காந்தியுடன் 300 பேர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. பயணத்தின் நடுவே ராகுல் காந்தி மற்றும் சக தலைவர்கள் ஓய்வெடுக்க வசதியாக  60 கேரவன்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை கன்னியாகுமரி கொண்டு வரப்பட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com