இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சித் தேர்தல் நடந்தது. இதில் பிரிட்டனின் வெளியுறவுத்துறை செயலராக பணியாற்றி வந்த லிஸ் டிரஸ், அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்:
பிரிட்டனில்,பிரதமர் தேர்தல் செப்டம்பர் 2-ம் தேதி நடந்த நிலையில் லிஸ் டிரஸ் மற்றும் இந்திய வம்சாவலியைச் சேர்ந்த ரிஷி சுனக் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் லிஸ் டிரஸ் இன்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பிரிட்டனின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
ரிஷி சுனக் 60,399 வாக்குகள் பெற்ற நிலையில், லிஸ் டிரஸ் 81,326 வாக்குகள் பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து லிஸ் டிரஸ்ஸை அந்நாட்டுப் பிரதமராக அதிகாரபூர்வமாக இங்கிலாந்து ராணி எலிசெபத் அறிவிப்பார் என்று சொல்லப் படுகிறது. அதன்பிறகு லிஸ் பதவியேற்பார்.
லிஸ் டிரஸ்-க்கு, வயது 46. இப்போது இங்கிலாந்தில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழ்நிலையில், லிஸ் டிரஸ்க்கு பெரும் சவாலாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் வாக்குறுதியாக லிஸ் டிரஸ் தெரிவித்ததாவது;
பிரிட்டன் மக்களின் அன்றாட வாழ்க்கை செலவுகளை அதிகரிக்கும் எரிசக்தி பிரச்னையை தீர்க்க முன்னுரிமை அளிப்பேன். உள்நாட்டு எரிசக்தி விநியோகத்துக்கு ஊக்கம் அளிக்கப்படும். வரிக்குறைப்பு சலுகைகளும் உண்டு.
-இவ்வாறு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.