ஜூன் 9  நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்; அதிகாராபூர்வ அறிவிப்பு!

ஜூன் 9  நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்; அதிகாராபூர்வ அறிவிப்பு!

தமிழ்த் திரையுலக இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கு ஜூன் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் இந்து முறைப்படி நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்ததாவது;

எங்கள் திருமணததை திருப்பதி ஏழுமலையான கோவிலில் நடத்தலாம் என்றுதான் முதலில் நினைத்திருந்தோம். அதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளையும் செய்து வந்தோம். ஆனால் சில நடைமுறை சிக்கல்கள் மற்றும் பயண தூரம் காரணமாக எங்கள் திருமண திட்டத்தை மகாபலிபுரத்திற்கு மாற்றிவிட்டோம். ஜூன் 9-ம் தேதி ஒருசில நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்ய இருக்கிறோம்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக முதல்வர் ஸ்டாலினை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நேரில் சந்தித்து தங்கள் திருமண பத்திரிகையைக் கொடுத்துவிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com