நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
Published on

நாட்டில் மருத்துவ இளநிலை படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வின் முடிவுகள் இன்று காலை  வெளியிடப் படுகின்றன.

-இதுகுறித்து தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்ததாவது;

நாட்டில் இந்த ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான  'நீட்' நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது.

இந்தியாவில் 497 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் என மொத்தம் 3,570 மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் இத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர்.

தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு தாமதம் ஆனதை தொடர்ந்து நீட் தேர்வு முடிவும் காலதாமதம் ஆனது. இதன் காரணமாக பொறியியல் கலந்தாய்வும் தள்ளிப்போனது.

இந்நிலையில் நீட் தேர்வு முடிகள் இன்று காலை வெளியிடப் படுகிறது. மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

–இவ்வாறு தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

முதலில் NTA-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் — neet.nta.nic.in முகப்புப் பக்கத்தில், சமீபத்திய அறிவிப்பின் கீழ் 'NEET 2022 Result' என்பதைக் கிளிக் செய்யவும். அடுத்த சாளரத்தில் NTA NEET விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட சான்றுகளை உள்ளிடவும். NEET 2022 முடிவைக் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com