ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி!

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி!
Updated on

தமிழ்நாட்டின் கன்னியாகுமரிலிருந்து காஷ்மீர் வரை நடை பயணமாக இன்று தனது 'பாரத் ஜோடா யாத்ரா'வைத் தொடங்குவதற்காக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி நேற்று மாலை சென்னை வந்தடைந்தார்.

அதன் பின்னர் இன்று காலையில் ஶ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்குச் சென்று கண்களை மூடி அமர்ந்து தன் தந்தைக்கு ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.

-இந்நிலையில் ராகுல் காந்தி தன் டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டதாவது;

நாட்டின் வெறுப்பு அரசியல் மற்றும் பிரிவினைவாத அரசியலுக்காக என் தந்தையை இழந்தேன்.ஆனால் எனது நாட்டை இழக்க மாட்டேன்.வெறுப்புணர்வை அன்பு வெல்லும். அதேபோல பயத்தை நம்பிக்கை வீழ்த்தும். இந்த இரண்டும் இருந்தால் எந்த பிரச்சினையையும் சமாளிக்கலாம்.

-இவ்வாறு ராகுல் காந்தி தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com