ரேஷன் அட்டைதாரர் குறைதீர் முகாம்; நாளை மறுநாள் நடக்கிறது!

ரேஷன் அட்டைதாரர் குறைதீர் முகாம்; நாளை மறுநாள் நடக்கிறது!

சென்னையில் ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய குறைதீர் முகாம் நாளை மறுநாள் (செப்டம்பர் 10) நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

-இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது;

மாநிலம் முழுவதும் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் எளிதில் பெறுவதற்கு தமிழக முழுவதும் அனைத்து வட்டங்களிலும் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது.

அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர குறைத்தீர் முகாம்,  சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும் இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட சேவைகள் அனைத்தையும் மேற்கொள்ளலாம்.

மேலும், ரேஷன் கடைகளில் பொருள் வாங்க நேரில் வர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்றிதழ் இந்த முகாமில் வழங்கப்படும். மேலும் ரேஷன் கடைகளில் குறைபாடுகள் குறித்த புகார்களை இந்த முகாமில் தெரிவிக்கலாம்.

-இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com