தமிழக மின் கட்டணம் அடுத்த மாதம் முதல் உயர்வு?!

தமிழக மின் கட்டணம் அடுத்த மாதம் முதல் உயர்வு?!

Published on

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்கட்டண உயர்வு அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

-இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

தமிழகம் முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள மின்வாரிய அலுவலக இடங்களில் முதற்கட்டமாக 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் சார்ஜிங் பாயிண்ட் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள வசதியாக 1.45 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் இதுவரை ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் 100 நாட்களில் வழங்கும் திட்டம் இந்த மாதம் தொடங்கப்படும்.மேலும் தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்க உள்ளதால், தமிழகத்தில் புதிய மின் கட்டணத்தை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.

-இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com