தமிழகத்தில் கொரோனா 4 -வது அலையா?

தமிழகத்தில் கொரோனா 4 -வது அலையா?
Published on

தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதால், 4 – வது அலைக்கான அறிகுறி துவங்கியுள்ளதாக தமிழக சுகாதாரத்  துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்..

சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கல்லீரல் கொழுப்பு நோய் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், அவர் பேசியதாவது:.
இந்தியாவில் கொரோனா பரவல், 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கேரளா, மஹாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில்  மற்ற மாநிலங்களை விட குறைவு . என்றாலும், புதிய
உருமாறிய தொற்றுகள், கண்டறியப்பட்டுள்ளதால்,, 4 – வது அலையின்   அறிகுறியாக தோன்றுகிறது. எனவே, பொது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பொது இடங்களில் முக கவசம் அணிவது அவசியம்.
தமிழக மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட, ஐந்து மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவற்றைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
– இவ்வாறு அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com