நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!
Published on

நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ள நிலையில், இன்று அத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப் படுகிறது.

-இதுகுறித்து நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகாம் தெரிவித்ததாவது:

நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி ஆகியவற்றுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இந்த தேர்வில் பங்கேற்க நாடு முழுதும் 18.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து, 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் நடைபெற இருக்கிறது. அதேபோல் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வு மதியம் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

இந்நிலையில் தற்போது நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். நீட் யுஜி 2022க்கான நுழைவுச் சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான வழிமுறை;

முதலில் நீட் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in- பகுதிக்குச் செல்லவும்.
* இப்போது முகப்புப் பக்கத்தில், 'Download Neet UG 2022 Admit Card 2022' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
* இப்போது ஒரு புதிய வலைப்பக்கம் திறக்கும்.
* விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தேவையான உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும்.
* உங்கள் நீட் யுஜி 2022 அட்மிட் கார்டு திரையில் காட்டப்படும்.
* அட்மிட் கார்டை டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com