காஷ்மீரில் தீவிரவாதம் : 3 ராணுவ வீரர்கள் பலி! 

காஷ்மீரில் தீவிரவாதம் : 3 ராணுவ வீரர்கள் பலி! 

காஷ்மீரில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

– இது குறித்து இந்திய ராணுவம் சார்பில் தெரிவித்ததாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்திலிருந்து 25 கிமீ.,தொலைவில் உள்ள ராணுவ முகாம் மீது இன்று அதிகாலையில் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். மேலும் பல ராணுவ  வீரர்கள்  காயமடைந்துள்ளனர். அதேநேரம், இந்த தாக்குதலை நடத்திய இரண்டு தீவிரவாதிகளும் உயிரிழந்தனர்.  மேலும் பதுங்கியுள்ள மற்ற தீவிரவாதிகளை கண்டறிய ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

– இவ்வாறு இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com