நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவர் இன்று பதவியேற்பு!

நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவர் இன்று பதவியேற்பு!

நாட்டின் 14-வது புதிய குடியரசுத் துணைத்  தலைவராக ஜெகதீப் தங்கர் இன்று பொறுப்பேற்கிறார்.

– இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:

நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த வெங்கைய நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, அப்பதவிக்கான தேர்தல் கடந்த 6-ம் தேதி நLந்தது. இதில் புதிய குடியரசுத் துணைத் தலைவருக்கான பிஜேபி வேட்பாளராக ஜெகதீப் தங்கரும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிட்டனர். இத்தேர்தலையொட்டி, ஜெகதீப் தங்கர் தான் வகித்து வந்த மேற்கு வங்க கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் புதிய குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 725 பேர் வாக்களித்தனர். இதில் மெஜாரிடி வாக்குகள் பெற்று ஜெகதீப் தங்கர் வெற்றி பெற்றார்.

இதையடுத்து நாட்டின் 14-வது குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் இன்று பதவியேற்கிறார்.அவருக்கு குடியரகத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், பல மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

– இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com