சத்தீஸ்கர் மாநிலத்தில் பிறந்து 10 மாதங்கள் மட்டுமே ஆன பெண் குழந்தை ஒன்றுக்கு ரயில்வேயில் பணி அளிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
–இதுகுறித்து அம்மாநில ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவித்ததாவது:
சத்தீஸ்கர் மாநிலம் பிகாலியில் உள்ள ரயில்வே அலுவலகத்தில் பணியாற்றிய ராஜேந்திர குமாருக்கு, 10 மாத பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் ராஜேந்திர குமாரும் அவரது மனைவியும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர்.
பொதுவாக ரயில்வே ஊழியர்கள் பணிக் காலத்தில் உயிரிழந்தால் அவரது வாரிசுகளுக்கு ரயில்வேயில் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் ராஜேந்திர குமாரின் 10 மாத பெண் குழந்தைக்கு வாரிசு அடைப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக குழந்தையின் கைரேகை எடுக்கப்பட்டு ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அக்குழந்தைக்கு 18 வயது பூர்த்தியானதும், அவர் ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்து பணியாற்றலாம்.
-இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக 10 குழந்தைக்கு பணி வழங்கப்பட்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.