கடலில் மீன்பிடித்த மீனவர்கள் 6 பேர் கைது! 

கடலில் மீன்பிடித்த மீனவர்கள் 6 பேர் கைது! 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பாட்டினத்தில் இருந்து மீன்பிடிப்பதற்காக விசைப்படகில் கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் 6 பேரை அவர்கள் எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-இதுகுறித்து புதுக்கோட்டை மீனவர்கள் சங்கத்தினர் சார்பாக தெரிவித்ததாவது:

ஜெகதாப் பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் கார்த்திக், தேவராஜ், சுரேஷ், திருமேனி, வேல்முருகன், சுந்தரம் ஆகிய 6 மீனவர்கள் இன்று விசைப் படகில் சென்று கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து மயிலட்டி துறைமுகத்துக்கு கொண்டு சென்றதாகத் தெரிய வந்துள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் விசைப் படகுகளை பறிமுதல் செய்வதுமான அராஜகம் தொடர்ந்து நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும். இன்று இலங்கை கடற்படை கைது செய்த 6 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com