வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற சென்னை மாநகராட்சி கோரிக்கை!

வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற சென்னை மாநகராட்சி கோரிக்கை!
Published on

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையிலும், தேசப்பற்று உணர்வை போற்றும் வகையிலும் அனைத்து வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி வைக்க சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

,இந்தியாவின்  75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேசிய அளவில் "சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா" என அனைத்து வீடுகளிலும் ஆகஸ்டு 13 முதல் 15 வரை மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாடுமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் அனைத்து வீடுகளிலும், கடைகளிலும், அரசுக் கட்டடங்கள், வணிக வளாகங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் காவல் நிலையங்களிலும் தேசியக்கொடி ஏற்றுவது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேசியக் கொடி தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிப்படுத்தவும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து வீடுகள் மற்றும் கடைகளில் மூவர்ண தேசியக் கொடி ஏற்றவும் வலியுறுத்தப்பட்டது

எனவே, பொதுமக்கள் இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாகவும், தங்களின் தேசப்பற்று உணர்வை போற்று வகையிலும் தங்களது வீடு மற்றும் கடைகளில் ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை தேசியக் கொடியினை ஏற்றி வைக்கவும், ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின்னர் மூவர்ண தேசியக் கொடியினை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com