நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, வீடுகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இந்திய தேசியக் கொடியை முதலில் வடிவமைத்தவர் ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி பிங்கலி வெங்கய்யா என்பவர்.அவர் நமது தேசிய கொடியின் அடிப்படையை உருவாக்கி மகாத்மா காந்தியிடம் அளித்தார். ஆனால், அதை மேம்படுத்தி, நம் நாட்டின் தேசியக் கொடியை அதிகாரப்பூர்வமாக வடிவமைத்தவர்கள் தேசத் தியாகி பக்ரூதீன் தியாப்ஜி மற்றும் அவரது மனைவி சுரைய்யா ஆகியோர் ஆவர்.
நம் நாட்டு தேசியக் கொடியை மேம்படுத்தி வடிவமைக்கும் இவர்களிடம் ஜவஹர்லால் நேரு, அளித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த குழுவில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர்.
அதன்படி நமது தேசிய மூவர்ண கொடியையும் அதன் மத்தியில் அசோக சக்கரத்தையும் வடிவமைத்தவர்கள் பக்ருதீன் தியாப்ஜி மற்றும் அவர் மனைவி சுரைய்யா .
அந்த வகையில் 1947- ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி தாங்கள் தயாரித்த தேசியக் கொடியை நேருவிடம் அவர்கள் அளிக்க, அந்த தேசியக் கொடி அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதுவே சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாக மூவர்ணத்தில் பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது.