TNPSC குரூப் – 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

TNPSC குரூப் – 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

Published on

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 24-ம் தேதி குரூப் 4 தேர்வு நடத்தவுள்ள நிலையில் அதற்கான ஹால் டிக்கெட்டை தனது அதிகாரபூர்வ  இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான ஊழியர்களை  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)  மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4  ஆகிய பிரிவுகளில் நடத்தப்படுகிறது

இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(வி...), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7,382 அரசு பணியிடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று அதற்கான ஹால் டிக்கெட்டை  டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டு உள்ளது.  

இத்தேர்வில் பங்குபெறுவோர், அதற்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்வதற்கான வழிமுறைகளை தெரிவித்ததாவது;

  1.  www.tnpsc.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. "ஆன்லைன் சேவை"என்பதை கிளிக் செய்ய வேண்டும்
  3. "ஹால் டிக்கெட் பதிவிறக்கம்" என்பதை கிளிக் செய்யவும்

4:  பின்னர் வலதுப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள "Download Hall Ticket" என்பதைக் கிளிக் செய்யவும். 

  1. 'TNPSC குரூப் 4 தேர்வு' இணைப்பை கிளிக் செய்யவும்
  2.  உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். 

–இவ்வாறு டி. என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. 

logo
Kalki Online
kalkionline.com