குடியரசுத் துணைத் தலைவருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு! 

குடியரசுத் துணைத் தலைவருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு! 

நாட்டின் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லியில் சந்தித்து அவர் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார் 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது; 

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவருடன் தனி செயலாளர் உதயச்சந்திரன், உதவியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் சென்றனர்.

இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றதற்கு வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

இன்று மாலை 4:30 மணிக்குப் பிரதமர் மோடியைச் சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவிக்க உள்ளார்.

மேலும் தமிழகத்தில் நீட் விலக்கு மசோதா, ஜிஎஸ்டி நிதி நிலுவைத் தொகை உள்ளிட்டவை குறித்தும் புதிய திட்டங்கள் குறித்தும் பிரதமரிடம் பேச உள்ளார். அதன் பின்னர் இன்றிரவு 8.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். 

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com