ராமேஸ்வரத்தில் இந்தியக் கடற்படை பாதுகாப்பு ஒத்திகை! 

ராமேஸ்வரத்தில் இந்தியக் கடற்படை பாதுகாப்பு ஒத்திகை! 

தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதிகளில் உச்சிபுளி .என்.எஸ் பருந்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் ரோந்துக் கப்பல்கள் மூலம் திடீர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது 

இதுகுறித்து இந்தியக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்ததாவது: 

இலங்கையின் அம்பந்தோட்டா கடற்பகுதியில் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பல் வந்துள்ளது. அக்கப்பல்  உள்ள இலங்கைக் கடற்பகுதி ராமேஸ்வரத்துக்கு மிக அருகாமையில் உள்ளதால், இங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

சீன கப்பல் இலங்கையிலிருந்து கிளம்பும் வரை ராமேஸ்வரம் கடற்பரப்பு பகுதியில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ள உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதற்காக இந்திய கடற்படை, கடலோர காவல் படை, .என்.எஸ் பருந்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு ஒத்திகை செய்யப்படுகிறது. 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com