ஓடும் ரயிலில் தவறி விழுந்து பெண் கார்டு உயிரிழப்பு! 

ஓடும் ரயிலில் தவறி விழுந்து பெண் கார்டு உயிரிழப்பு! 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ரயிலிலிருந்து பெண் கார்டு தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. 

இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள தெற்கு ரயில்வே பொது சார்பாக தெரிவிக்கப் பட்டதாவது; 

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் மினிமோல்(36) என்ற பெண், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே கார்டாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கவுகாத்தி விரைவு ரயிலில் சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்திலிருந்து, ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வரை கார்டாகப் பணிபுரிந்தார்.

அந்த ரயில் குடியாத்தம் மற்றும் வளத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, மினிமோல் பச்சைக் கொடியைக் காட்ட முயன்றபோது, எதிர்பாராதவிதமாக ஓடும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்நிலையில் கார்டு மூலம் தகவல் கிடைக்காததால், ரயில் ஓட்டுநர், ஆம்பூரை அடுத்த பச்சகுப்பத்தில் ரயிலை நிறுத்தி, அந்த ரயில் நிலைய மேலாளருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தார். பின்னர் தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார், மினிமோலின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை ரயில்வே கோட்ட முதுநிலைப் பொறியாளர்கள் இருவர் கொண்ட குழு விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது 

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com