பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் ஏடிஎம்மில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணமாக ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த கட்டணம் இன்று முதல் 21 ரூபாயாக உயர்ந்துள்ளது.
–இதுகுறித்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்ததாவது:
தற்போது ஏடிஎம் மையங்களின் பராமரிப்பு மற்றும் அதனை நிறுவுவதற்கான செலவினங்கள் ஆகியவையை கருத்தில் கொண்டு ஏடிஎம் மையங்களில் பண பரிவர்த்தனைக் கட்டணத்தை உயர்த்த தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது .
அதன்படி இன்றுமுதல் வாடிக்கையாள்ர்கள் 1 மாதத்துக்கு 5 முறைக்கு மேல் ஏடிஎம்-மில் பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 21 ரூபாய் வசூலிக்கப்படும். அதேபோல, பிற ஏடிஎம்–மில் இருந்து 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் இக்கட்டணம் வசூலிக்கப்படும்.
–இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.