மகாநதியில் வெள்ளப் பெருக்கு; தவிக்கும் கிராமங்கள்! 

மகாநதியில் வெள்ளப் பெருக்கு; தவிக்கும் கிராமங்கள்! 

ஒடிசா மாநிலத்தில் மகாநதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் கரையோரத்திலுள்ள 200-க்கு மேற்ப்பட்ட  கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். 

இதுகுறித்து ஒடிசாவில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் பேரிடர் மீட்புக் குழ்வினர் தெரிவித்ததாவது; 

ஒடிசாவில் தொடர் மழை காரணமாக மகாநதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரையோரமுள்ள 237 கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கிக் தவிக்கின்றனர். பல ஆயிரம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

மகாநதியில் உள்ள ஹிராகுட் அணையில் வினாடிக்கு 6.81 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் புரி, ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, குர்தா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் டிசாவின் வடகடலோர 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com