தமிழகத்தில் மின் கட்டணம் விரைவில் உயர்வு!

தமிழகத்தில் மின் கட்டணம் விரைவில் உயர்வு!

தமிழகத்தில் மின்துறையில் கடன் தொகை அதிகரித்ததாலும், மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு வலியுறுத்தியதாலும் விரைவில் மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடியாக உயர்ந்துள்ளது. எனவே தமிழகத்தில் விரைவில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின் கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப் பட்டுள்ளது.

அந்த வகையில் 42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. முதல் 100 யூனிட் மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை. விசைத்தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம் தொடர்ந்து அமல்படுத்தப்படும். 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு கூடுதலாக ரூ.27.50 கட்டணம் வசூலிக்கப்படும்.

அதேபோல் 300 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 கூடுதலாகவும், 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 கூடுதலாகவும் கட்டணம் வசூலிக்கப்படும். 500 யூனிட்டுக்கு மேல்  மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 கூடுதலாகவும், 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.155 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செந்தில பாலாஜி தெரிவித்தார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com