அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை: ஆய்வாளர் சஸ்பெண்ட்! 

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை: ஆய்வாளர் சஸ்பெண்ட்! 

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில், அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவித்ததாவது: 

அரும்பாக்கம் தனியார் நகை கடன் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளை போனது. இந்த விவகாரத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 28 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.அதில் கொள்ளையன் சந்தோஷ் மனைவி ஜெயந்தியும் அச்சரப்பாக்கம் ஆய்வாளர் அமல்ராஜ் மனைவி மெர்சியும் உறவினர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்மீதான விசாரணையில் அச்சரப்பாக்கம் ஆய்வாளர் மனைவி தனது வீட்டில் மூன்று கிலோ நகைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3.7 கிலோ நகைகளை பறிமுதல் செய்துத்துடன், ஆய்வாளர் அமல்ராஜஜூக்கு கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதையும் கண்டுபிடித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறைக்கு இது குறித்து விசாரிக்க சென்னை காவல்துறை உத்தரவிட்டது. அதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார் 

இந்நிலையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா அமல்ராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் 

இவ்வாறு தெரிவித்தனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com