கள்ளக்குறிச்சி கலவரம்: மெரினாவில் பாதுகாப்பு தீவிரம்!

கள்ளக்குறிச்சி கலவரம்: மெரினாவில் பாதுகாப்பு தீவிரம்!

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக மீண்டும் போராட்டம் நடத்த போவதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியதையடுத்து, சேலம் மாநகர மாவட்ட எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சென்னை மெரினா கடற்கரையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அங்கு வன்முறை வெடித்தது. பள்ளி வாகனங்கள், சான்றிதழ்கள், போலீஸ் வாகனங்களை தீயிட்டு எரித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த மாணவியின் உயிரிழப்பிற்கு நீதிகேட்டு மாணவர் சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியதையடுத்து காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

சேலம் மாநகரம், ரயில் நிலையம் ஆகியவற்றில் போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.மேலும் சேலம் மாவட்ட எல்லைகளில் சோதனைசாவடி நிலையங்கள் என அனைத்து இடங்களிலும்  போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாக தனியார் கல்லூரி மாணவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com